» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டிவி விவாதத்தில் பேசியதால் வழக்கு: இயக்குனர் அமீருக்கு கோவை நீதிமன்றம் முன்ஜாமீன்!!

திங்கள் 25, ஜூன் 2018 4:22:05 PM (IST)

தனியார் தொலைகாட்சி விவாதத்தில், பொது அமைதியை பாதிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் இயக்குனர் அமீருக்கு கோவை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

கோவையில் தனியார் தனியார் தொலைகாட்சி இம்மாதம் நடத்திய விவாத நிகழ்ச்சியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரைப்பட இயக்குநர் அமீர் மீது, நிறுவனம் மற்றும் அதன் செய்தியாளர் அமீர் மீது வழக்கு போடப்பட்டது. 

இதில் அமீர் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் அமீர்க்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக பீளமேடு காவல்நிலையத்தில் ஆஜாராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து, இன்று பீளமேடு காவல்நிலையத்தில் ஆஜரானார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காவல்நிலையத்தில் அமீர் விளக்கம் அளித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமீர் கூறியதாவது: தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது என்னை தாக்க வந்தவர்கள் தொடர்பாக பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். விவாதத்தில் "அமீர் பேசியதில் என்ன தவறு உள்ளது?"என இன்று முன்ஜாமீன் வழங்கிய நீதிபதியும் கேட்டு இருக்கிறார். தன் மீது எந்த தவறும் இல்லை. சமீபத்திய அனைத்து கைதும், கருத்துரிமையை பறிக்கும் வகையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டவை. இவற்றை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. நீதிமன்றங்கள் நீதியின் பக்கம் இருப்பதை எண்ணி பெருமைப்பட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமீர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory