» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி: மாறுபட்ட தீர்ப்பு குறித்து ஸ்டாலின் கருத்து!!

வியாழன் 14, ஜூன் 2018 5:08:48 PM (IST)

"தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி" என, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் மாறுபட்ட தீர்ப்பு குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பளித்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், "ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான- நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்கவேண்டும். தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும். அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory