» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சேராத இடம் சேர்ந்து பதவியை இழந்து நிற்போரின் எண்ணிக்கை 18.... நமது அம்மா நாளிதழில் கவிதை!!

வியாழன் 14, ஜூன் 2018 12:13:41 PM (IST)

"அதிமுகவில் இருந்து விலகி, வழிமாறிச் சென்று சேராத இடம் சேர்ந்து பதவியை இழந்து, மீண்டும் உயிர்வந்து வாழுமோ என விழி பிதுங்கி நிற்போரின் எண்ணிக்கை 18" நமது அம்மா நாளிதழ் கவிதை வெளியிட்டுள்ளது. 

அரசியல் கருத்துக்களை நையாண்டியோடு எடுத்து சொல்லும், சித்ரகுப்தன் என்ற பெயரில் எழுதப்படும் பத்தியில் பதினெண் கீழ்க் கணக்கு... என்ற தலைப்பில் இந்த கவிதை இடம் பெற்றுள்ளது.  அந்த கவிதையில், சேராத இடம் சேர்ந்து 18 பேர் வீழ்ந்ததாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

செத்தவர் தம்மை எழுப்பித் தருகின்றன சித்தர்கள் கணக்கு பதினெட்டு...

இலை கொண்ட இயக்கம் விட்டு, நரி கொண்ட குகை நோக்கி வழிமாறிச் சென்று, சேராத இடம் சேர்ந்து செயலிழந்த தம் பதவி...

மீண்டும் உயிர் வந்து வாழுமோ என விழி பிதுங்கி நிற்போரின் எண்ணிக்கை மொத்தமும் பதினொட்டு...

என்ன செய்வது.. மண்ணில் விழும் மழைநீர் போல், மனிதரும் சேரும் இடம் பொறுத்தே தன்னிலையில் உயர்ந்து வாழ்வதும், தடம் மாறிச்சென்று தலை குனிந்து வீழ்வதும்...

கரம் சிவக்கக் கொடுத்துச் சிறந்த கர்ணனும், களத்தே மாண்டான் எனில் துஷ்ட துரியோதனக் கும்பலோடு கூடாத இடம் தன்னில் கூடியதால்தான்.. 

சகுனியை சார்ந்தோர் அழிந்ததும்.. சாரதியாம் கண்ணனைச் சார்ந்தோர் 
அவனை நம்பிய அவல் குசேலனும் அதிகுபேரன் ஆனதும்.. குலம் பார்த்து கூடியதால் மட்டுமே! 

செம்புலப் பெயல் நீர்போல் சேரும் இடம்பொறுத்தே சிறப்புகள் எட்டுகிறது. போய்ச் சேரும் வழி பொறுத்தே பொறுப்புகள் கிட்டுகிறது! 

திருமாலை வணங்கியதால் முடி துறந்த மன்னனும் குலசேகர ஆழ்வாராய் குடி உயர்ந்தது போல, நல்லோரை கும்பிட்ட கரங்களுக்கு மட்டும்தான் அது பிரியுமுன்னே நன்மைகள் குவிகிறது!

வாய்மையின் வழிநின்று வணங்கும் கைகளுக்கு மட்டும்தான் அது விலகுமுன்னே வரங்கள் வாய்க்கிறது!

அதைவிட்டு பதவி தந்த இயக்கத்தை மறந்து பாசத்தாய் கட்டம் கட்டி வெளியேற்றிய பாதகக் கூட்டத்தோடு சேராத இடம் பிறகென்ன சேதாரம் தானே...

எதிர்காலம் என்னாகும் என்கிற நடுக்கத்தால் யாவும் வீணாகும் தானே"

என்று தினகரன் தரப்பை துரியோதனர் கூட்டத்தோடு ஒப்பிட்டு, எடப்பாடி பழனிச்சாமி தரப்பை பஞ்ச பாண்டவர்கள் தரப்புடன் ஒப்பிடப்பட்டுள்ளதுடன், சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தால் பிரச்னை இருக்காது என்று மறைமுகமாக 18 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory