» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இடைத்தேர்தல் வந்தால் 18 பேரும் மீண்டும் வெற்றி பெறுவோம்: தங்கதமிழ்ச்செல்வன் நம்பிக்கை

வியாழன் 14, ஜூன் 2018 11:58:58 AM (IST)

18 எம்எல்ஏக்கள் வழக்கில் நியாயமான தீர்ப்பு வரும்; இடைத்தேர்தல் வந்தால் 18 பேரும் மீண்டும் வெற்றி பெறுவோம் என்று தங்கதமிழ்ச்செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 18 எம்எல்ஏக்கள் வழக்கில் நியாயமான தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறேன். நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது, நீதிமன்றத்தை மதிக்கிறோம். எங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் நான் மட்டும் மேல்முறையீடு செய்ய மாட்டேன். 

இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார், 18 பேரும் மீண்டும் வெற்றி பெறுவோம். தகுதிநீக்கம் செய்யப்பட்டால் தொகுதி மக்களை சந்திக்க முடியவில்லை.  தவறே செய்யாமல் எம்எல்ஏ பதவிகளை இழந்துள்ளோம். கட்சி தாவல் அடிப்படையில் எங்களை தகுதிநீக்கம் செய்யவில்லை. தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் 18 பேரும் அதிமுக உறுப்பினர்கள்தான். சாதகமாக தீர்ப்பு வந்தால் நாங்கள் மீண்டும் சட்டப்பேரவைக்கு சென்று பணியாற்றுவோம் என்றார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory