» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன்? சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் கேள்வி

புதன் 13, ஜூன் 2018 3:45:09 PM (IST)

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன் என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் கேள்வி எழுப்பினார்.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூலில் அவதூறான கருத்துக்களை பகிர்ந்ததாக நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்றம் வரையிலும் மறுக்கப்பட்ட போதிலும், அவரை இன்னும் தமிழக போலீசார் கைது செய்யவில்லை. ஐம்பது நாட்களைக் கடந்தும் அவர் இன்னும் கைது செய்யப்படாமலதான் இருக்கிறார்.

இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன் என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் கேள்வி எழுப்பியுள்ளார். தற்பொழுது நடந்து வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்திலும் எஸ்.வி.சேகர் விவகாரம் எதிரொலித்தது.பேரவையில் புதனன்று எஸ்.வி.சேகர்  விவகாரம் குறித்து பேச எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் முயன்றார். ஆனால் அவருக்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார். இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் பேரவையில் சபாநாயகர் தனபால் பேசும் பொழுது, "நடிகர் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன் என்பதே எனது கேள்வி. நாம் அனைவரும் வரும் 20-ஆம் தேதி வரை பொறுத்திருக்கலாம். அன்றுதான் அவரை நீதிமன்றம் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தார். பேரவை நடைபெறும் பொழுதெல்லாம் வழக்கமாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜராவது வழக்கம். ஆனால் எஸ்.வி.சேகர் விவகாரத்தின் பொழுது அவர் பேரவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.     
 


மக்கள் கருத்து

சாமிJun 13, 2018 - 08:21:28 PM | Posted IP 162.1*****

என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் சிறந்த நாடக கலைஞன் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Thoothukudi Business Directory