» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய் டிவி புகழ் மிமிக்ரி கலைஞர் நவீனின் 2வது திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீஸ்

செவ்வாய் 12, ஜூன் 2018 10:44:56 AM (IST)

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி புகழ் மிமிக்ரி கலைஞர் நவீனின் 2வது திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் மிமிக்ரி செய்து பிரபலமானவர் சென்னை கொருக்குபேட்டையை சேர்ந்த நவீன்(35). கமல் ஹாஸன், அஜித், விஜய், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்று பேசி அசத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றவர். அவர் மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை நேற்று திருமணம் செய்வதாக இருந்தது. ஆனால் அந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

நவீன் தன்னை காதலித்து 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாக திவ்யா(28) என்ற பெண் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மேலும் தங்களுக்கு முறைப்படி பதிவுத் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களையும் போலீசாரிடம் அளித்தார். திவ்யா அளித்த ஆதாரங்களை பார்த்த போலீசார் நவீனின் திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்த ரிசார்டுக்கு உடனே கிளம்பிச் சென்றனர். திருமணத்தை நிறுத்திவிட்டு நவீனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

முதல் மனைவி இருக்கும்போதே நவீன் 2வது திருமணம் செய்ய முயன்று போலீசில் சிக்கியது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவி பிரபலம் சுனிதா கார் விபத்து சர்ச்சையில் சிக்கிய நிலையில் நவீனும் பிரச்சனையில் சிக்கியுள்ளார். நவீனுக்கும், திவ்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்கிறார்களாம். இந்நிலையில் தான் நவீன் 2வது திருமணம் செய்ய முயன்றுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory