» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரஜினியும்,கமல்ஹாசனும் எனது நண்பர்கள் இல்லை : பாளையங்கோட்டையில் சரத்குமார் பேட்டி

வியாழன் 17, மே 2018 6:52:55 PM (IST)

வரும் சட்டமன்ற தேர்தலில் இறைவன் நினைத்தால் விஜயகாந்துடன் இணைந்து செயல்படுவோம் என்றும் ரஜினி மற்றும் கமல்ஹாசன் எனது நண்பர்கள் அல்ல என பாளையங்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் சரத்குமார் பேசினார்.

ச.ம.க. துணை பொதுச் செயலாளர் சுந்தர் இல்ல விழா பாளை மார்க்கெட்டில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. விழாவில் ச.ம.க. தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமை க்கப்பட வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு அருதி பெரும்பான்மை இருந்தும் அது தேர்தலுக்கு பிந்தய கூட்டணி என கூறி பா.ஜனதாவை ஆட்சிக்கு அழைத்தது தவறு.

அரசியலிலும், கலைத்துறையிலும் விஜயகாந்த் எனக்கு நண்பர். நான் கஷ்டப்பட்ட நேரத்தில் எனக்கு அவர் தான் உதவினார். கமலும், ரஜினியும் என் நண்பர்கள் அல்ல, கலைத்துறையில் பயணிப்பவர்கள் மட்டுமே. வரும் சட்டமன்ற தேர்தலில் இறைவன் நினைத்தால் விஜயகாந்துடன் இணைந்து செயல்படுவோம். தென்காசி தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவேன்.இவ்வாறு அவர் கூறினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory