» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவையில் காவல்துறை அருங்காட்சியகம்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

வியாழன் 17, மே 2018 5:51:19 PM (IST)



கோவை ரயில் நிலையம் அருகே காவல்துறை அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 

காவல்துறை அருங்காட்சியகத்தில் நவீன ஆயுதங்கள், துப்பாக்கிகள், ராணுவ தளவாடங்கள் மற்றும் டாங்கிகள் வைக்கப்பட்டுளளன.கோவையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமானங்களுக்கு எரிபொருள் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கோவை ரயில் நிலையம் அருகே ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் காவலர் அருங்காட்சியகத்தை முதல்வர் திறந்து வைத்தார். 

தமிழக காவல்துறையின் வீரத்தை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி, தமிழக கடலோர காவல்படையினர் பயன்படுத்திய படகு, விடுதலை புலிகளிடம் கைப்பற்றபட்ட நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்டவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சிகத்தை திறந்து வைத்து பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமி, இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்க்காகவும் காவலர் அருங்காட்சியகம் உதவும் என்று கூறினார். கோவையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory