» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்த பேராசிரியை வீடு புகுந்து கைது

திங்கள் 16, ஏப்ரல் 2018 7:08:16 PM (IST)

கல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராக இருப்பவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் பாலியல் ஆசைக்கு இணங்க மாணவிகளிடம் அவர் வலியுறுத்துவதாகவும், இதன் மூலம் பணம் கிடைக்கும் என்பன உள்ளிட்ட ஆசைகளையும் பேராசிரியர் தெரிவிக்கிறார். 

கல்வியையும், நல் ஒழுக்கத்தையும் போதிக்க வேண்டிய பேராசிரியரே இதுபோன்று பேசியிருப்பது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.இதனை தொடர்ந்து பேராசிரியை கண்டித்து பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அவரை கல்லுாரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருந்த நிலையில் இன்றிரவு வீட்டின் பூட்டை உடைத்து பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பேராசிரியை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

ரஜினிகாந்த்Apr 17, 2018 - 11:41:19 AM | Posted IP 172.6*****

இவ்வா வீட்டுலவுள்ள பொம்பளைகளை இந்த தொழில்ல செய்ய சொல்லு ..........................................................................................புரோக்கர் நாய்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory