» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உயர் அதிகாரிகளுக்காக கல்லூரி மாணவிகளை தகாத வழிக்கு அழைத்த பேராசிரியை சஸ்பெண்ட்!

திங்கள் 16, ஏப்ரல் 2018 10:34:47 AM (IST)

கல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராக இருப்பவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் பாலியல் ஆசைக்கு இணங்க மாணவிகளிடம் அவர் வலியுறுத்துவதாகவும், இதன் மூலம் பணம் கிடைக்கும் என்பன உள்ளிட்ட ஆசைகளையும் பேராசிரியர் தெரிவிக்கிறார். 

கல்வியையும், நல் ஒழுக்கத்தையும் போதிக்க வேண்டிய பேராசிரியரே இதுபோன்று பேசியிருப்பது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பல்கலைக்கழகத்தில் இருக்கும் எந்த உயர் அதிகாரிகளுக்காக அவர் மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறினார் என்பது தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அந்த பெண் பேராசிரியரை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பேரிசிரியர் நிர்மலாதேவி, தவறான நோக்கத்துடன் மாணவிகளிடம் பேசவில்லை என்றும் அவை சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory