» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிளஸ்-2 செல்லும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சனி 14, ஏப்ரல் 2018 10:57:28 AM (IST)

கோடைவிடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்; பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை பொருந்தாது  என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

வருகிற 21-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் மாதம் 1-ம் தேதி திறக்கப்படும்.

அதற்கு முன்னதாக வருகிற 2-ம் தேதி முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிடம் புகார் அளிக்கலாம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க அரசு ரூ.60 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதுதவிர 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.463 கோடி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சீருடை வழங்கப்படும். அதேபோல் அனைத்து வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் பள்ளிகள் திறந்ததும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory