» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரத யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி பேரவையில் அமளி: சாலை மறியல் - மு.க. ஸ்டாலின் கைது!!

செவ்வாய் 20, மார்ச் 2018 12:41:10 PM (IST)

விஎச்பி ரத யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட  திமுக  எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர். 

ராமஜென்ம பூமியில் ராமர் கோயில், ராம ராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை நடத்தப்படுகிறது. மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக இந்த ரத யாத்திரை இன்று தமிழகம் வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் வரும் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று சட்டப்பேரவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரபட்டது. அப்போது ஸ்டாலின் பேசுகையில், ரத யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி பேசுகையில், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ரத யாத்திரை விவகாரத்தில் தேவையில்லாமல், அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளியால் சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளியேற்றப்பட்டனர். பின்னர்,  ரத யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் தலைமைச் செயலகம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.


மக்கள் கருத்து

மக்கள்Mar 20, 2018 - 03:43:37 PM | Posted IP 117.2*****

ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு இப்போது கிறுக்கு பிடித்து அலைகிறார்

தமிழன்Mar 20, 2018 - 01:20:03 PM | Posted IP 157.5*****

நாங்கள் வணங்கும் தெய்வம் ராமரின் ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு மக்கள் வரும் தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவார்கள் .....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory