» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மேல்மருவத்தூரில் யுகாதி விழா: ரூ.12 லட்சம் நல உதவிகளை பங்காரு அடிகளார் வழங்கினார்
ஞாயிறு 18, மார்ச் 2018 4:45:25 PM (IST)

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெற்ற யுகாதி விழாவில் ரூ.12 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை பங்காரு அடிகளார் வழங்கினார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் தெலுங்கு வருடப் பிறப்பன்று ஆந்திரம் மற்றும் தெலங்கானா பகுதி செவ்வாடைப் பக்தர்கள் மேல்மருவத்தூர் சித்தர்பீடத்தில் யுகாதி விழாவை கொண்டாடுவது வழக்கம். அதன்படி இன்று தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு சித்தர் பீடம் முழுவதும் வண்ணத் தோரணங்களாலும், வாழை மரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை கருவறை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. காலை 10 மணிக்கு சித்தர் பீடம் வந்த பங்காரு அடிகளாருக்கு மேளதாளம் முழங்க பாத பூஜை செய்து ஆந்திர மாநில நிர்வாகிகள் வரவேற்றனர்.
காலை 11 மணிக்கு ஆதிபராசக்தி மண்டபத்தில் ஆன்மிக பங்காரு அடிகளார் முன்னிலையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், சக்தி கலாதர் உரையைத் தொடர்ந்து அன்னையின் அருள்வாக்கு என்னும் தெலுங்கு பதிப்பு புத்தகத்தை அடிகளார் வெளியிட முதல் பிரதியை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் கோ.ப. அன்பழகன், ஸ்ரீதேவி ரமேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து ஆன்மிக பேருரை ஆற்றிய லெட்சுமி பங்காரு அடிகளார் அன்னையின் அருள்வாக்குகளை பக்தர்களுக்கு தொகுத்து அளித்தார்.

விழாவில் 40 பேருக்கு தையல் இயந்திரங்கள், 4 பேர்களுக்கு சலவை கற்கள் வெட்டும் கருவிகள், 20 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, மற்றும் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் உட்பட ரூ. 12 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை பங்காரு அடிகளார் வழங்கினார். முன்னதாக சக்தி சங்கர்பாபு அனைவரையும் வரவேற்றார். நிறைவாக சக்தி கங்காரதன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநில பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
RajanMar 18, 2018 - 08:36:23 PM | Posted IP 82.22*****
Very good.
ராஜன்Mar 18, 2018 - 08:34:23 PM | Posted IP 82.22*****
அருமையான நல உதவிகள். அனைவரும் அம்மாவின் ஆசியுடன் வாழ வேண்டும்.
மேலும் தொடரும் செய்திகள்

ஊழியர்களை மிரட்டிய துணைவேந்தர் செல்லத்துரை மீது நடவடிக்கை : ராமதாஸ் வலியுறுத்தல்
வியாழன் 26, ஏப்ரல் 2018 4:33:45 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வைகோ வழக்கு ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு
வியாழன் 26, ஏப்ரல் 2018 3:27:33 PM (IST)

ஜெயலலிதாவின் ரத்தமாதிரிகள் தங்களிடம் இல்லை : நீதிமன்றத்தில் அப்பல்லோ கைவிரிப்பு
வியாழன் 26, ஏப்ரல் 2018 2:15:55 PM (IST)

மடியில் கனமில்லை, வழியில் பயம் இல்லை ; குட்கா வழக்கு குறித்து விஜயபாஸ்கர் பதில்
வியாழன் 26, ஏப்ரல் 2018 1:53:48 PM (IST)

குட்கா விற்பனைக்கு அமைச்சர்.காவல்துறை அதிகாரிகள் துணை ; ஸ்டாலின் குற்றச்சாட்டு
வியாழன் 26, ஏப்ரல் 2018 1:21:43 PM (IST)

வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்: காவல் ஆணையர் வழங்கினார்
வியாழன் 26, ஏப்ரல் 2018 12:26:43 PM (IST)

OmsakthiMar 19, 2018 - 02:27:38 PM | Posted IP 157.5*****