» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தலைமைச் செயலகத்தில் தகராறு செய்த விவகாரம்: வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வனுக்கு முன்ஜாமீன்

செவ்வாய் 13, மார்ச் 2018 3:19:29 PM (IST)

தலைமைச் செயலகத்தில் தகராறு செய்த வழக்கில், டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வனுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தகராறு செய்ததாக, டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இருவரும் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தலைமறைவானார்கள். இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரி வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். 

இம்மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதில், இருவரும் மதுரையில் 2 வாரம் தங்கி இருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் 2 வாரங்களுக்குப் பிறகு சென்னை கோட்டை காவல்நிலையத்தில் தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory