» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரங்கணி காட்டுத்தீ : மலையேற்றத்திற்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி கைது

திங்கள் 12, மார்ச் 2018 5:31:35 PM (IST)

குரங்கணியில் மலையேற்றத்திற்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி ராஜேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய 9 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மீட்பு பணிகள் முடிந்துவிட்டது என விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே "மலையேற்றம் சென்றவர்கள் வனத்துறைக்கு தகவல் அளிக்கவில்லை, உரிய அனுமதி பெற்ற பிறகே சென்றிருக்க வேண்டும்" என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிஉள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக விசாரணையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மலையேற்றத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள், அழைத்துச் சென்றவர்கள் என விசாரணை விரிவடைகிறது. குரங்கணியில் மலையேற்றத்திற்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி ராஜேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory