» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரங்கணி காட்டுத் தீயில் 9 பேர் உயிரிழப்பு: 27 பேர் மீட்பு - தேனி ஆட்சியர் அறிவிப்பு

திங்கள் 12, மார்ச் 2018 10:27:15 AM (IST)



குரங்கணி வனப்பகுதியில் நடைபெற்ற காட்டுத் தீயில் 9 பேர் உயிரிழந்ததாக தேனி மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதி உள்ளது.  குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. சுற்றுலாவுக்காக இங்கு அதிகம் பேர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் குரங்கணி வனப்பகுதியில் நேற்று பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர்.  வனப்பகுதியில் சிக்கியவர்களை மீட்க போர் கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.  இதுவரை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உள்பட 27 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்த காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.  மலையேற சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கி கொண்டனர் என தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.  இதுவரை மீட்கப்பட்ட 27 பேரில் 10 பேருக்கு எந்த காயமும் இல்லை.  பலியானவர்களில் 6 பேர் பெண்கள். காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த 9 பேரில் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் மற்றும் 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory