» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேல்மருவத்துாரில் புதிய சாலையை ஆட்சியர் திறந்து வைத்தார் : பங்காரு அடிகளாரி்டம் ஆசி பெற்றார்

வியாழன் 15, பிப்ரவரி 2018 7:08:49 PM (IST)மேல்மருவத்துார் ஏரிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையை காஞ்சிபுரம் மாவட்டஆட்சியர் திறந்து வைத்தார்.தொடர்ந்து சித்தர்பீட அமாவாசை வேள்வியில் பங்கேற்று அருட்திரு பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றார்.

மேல்மருவத்துார் ஏரிக்கரையில் அமைந்துள்ள மகாத்மாகாந்தி சாலைக்கும் ஆதிபராசக்தி மருத்துவமனை சாலைக்கும் இடையே 8லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய தார் சாலையை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று மதியம் 3.15 மணிக்கு திறந்து வைத்தார்.

இந்த சாலை காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சித்தாமூர் ஒன்றியம் மேல்மருவத்துார் ஊராட்சி தன்னிறைவு திட்டத்தின் கீழ் கட்டப்ப ட்டது. முன்னதாக மாலை 3 மணிக்கு மேல்மருவத்துார் வந்த ஆட்சியரை மேல்மருவத்துார் ஆதிபராசக்திஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் துணை தலைவர்கள் கோ.ப அன்பழகன் மற்றும் கோ.ப செந்தில்குமார் ஆகியாேர் பாென்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து, மாலை அணிவித்து வரவேற்றனர். மாலை 3.15 மணிக்கு புதிய சாலையை திறந்து வைத்த ஆட்சியர் பின்னர், பாரதியார் சாலை என்னும் புதிய பெயர்பலகையையும் திறந்து வைத்தார்.பின்னர் 4 மணிக்கு சித்தர்பீ்டம் வந்த ஆட்சியரை சித்தர்பீட பொறுப்பாளர்கள் வரவேற்றனர். கருவறை அம்மன், புற்று மண்டபம், கன்னிக்கோவில், நாக பீடம் அதர்வண பத்திரகாளி சன்னதிகளில் பயபக்தியுடன் வழிபட்ட மாவட்ட ஆட்சியர் சித்தர்பீடத்தின் பின்புறமுள்ள அருட்கூடத்தில் ஆன்மிக குரு அருட்திரு பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார்.

இன்று மாசி மாத அமாவாசை நாளாக இருந்ததால் சித்தர்பீடத்தில் வழக்கமான அமாவாசை வேள்வியை மாலை 4.30 மணிக்கு ஆன்மிககுரு அருட்திரு பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற இவ்வேள்வியில் 60 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வேள்வியிலும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.


மக்கள் கருத்து

சங்கர்Feb 16, 2018 - 12:26:38 PM | Posted IP 61.2.*****

ஓம் சக்தி ஓம் சக்தி

MURUGANNFeb 16, 2018 - 10:59:33 AM | Posted IP 107.1*****

Omsakthi

sivaFeb 15, 2018 - 08:12:35 PM | Posted IP 103.3*****

ஓம் சக்தி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory