» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாக மருத்துவர் பாலாஜி 3வது முறையாக விளக்கம்!!

புதன் 14, பிப்ரவரி 2018 5:48:37 PM (IST)

ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது தொடர்பாக மருத்துவர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் 3வது முறையாக ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். 

சுகாதாரத்துறை செயலரின் வாய்மொழி உத்தரவின் பேரில் கைரேகைப் பெறப்பட்டது என்று மூன்றாவது முறையாக இன்று விசாரணை ஆணையம் முன்பு ஆஜரான மருத்துவர் பாலாஜி கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதாவிடம் கைரேகை பெற முதலவர், தலைமைச் செயலாளரிடம் இருந்து எழுத்துப்பூர்வ ஆவணம் வரவில்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜரான அரசு மருத்துவர் பாலாஜி வாக்குமூலம் அளித்தார். ஏற்கனவே 2 முறை மருத்துவர் பாலாஜி ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். 

இந்நிலையில், இன்று 3வது முறையாக ஆஜரான அவர் கைரேகை பெறப்பட்டது தொடர்பாக புதிய தகவலை கூறியுள்ளார். மீண்டும் தேவைப்பட்டால் மருத்துவர் பாலாஜியை விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராக அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஜெயலலிதா சமையலர் ராஜம்மாள் பிப்-20 ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 21 ஆம் தேதி முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியனும், 23-ம் தேதி ஓட்டுநர் ஐய்யப்பன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory