» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறுவர் சீர்திருத்த பள்ளியிலிருந்து தப்பிய 4 பேர் கைது : எட்டு பேருக்கு போலீஸ் வலை

புதன் 14, பிப்ரவரி 2018 1:18:56 PM (IST)

பாளையங்கோட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலிருந்து 12 பேர் தப்பியோடியதில் 4 சிறுவர்களை கிழக்கு காவல்நிலைய போலீசாா் கைது செய்தனா்.

நெல்லை அரசு சிறுவர் கூா்நோக்கு இல்லத்தில் மொத்தம் 32 சிறுவர்கள் உள்ளனர். அவர்களில் 12 போ் நேற்று இரவு கூா்நோக்கு இல்ல வாா்டன் மற்றும் காவலர்களை திடீரென தாக்கி விட்டு தப்பி ஓடினார்கள். இதில் தப்பிய 12 குற்றவாளிகளில் சாக்கோட்டை சூரியா, தட்டப்பாறை மாரி கண்ணன், திருப்பத்தூர் பாலாஜி., மேலப்பாளையம் பால்துரை ஆகியோர் சொந்த ஊர்களுக்கு செல்லும் வழியில் பிடிபட்டனர் மீதமுள்ள 8 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.இதில் சூரியா போலீசில் பிடிபட்டதும் தான் வைத்திருந்த கத்தியால் குத்தி தற்கொலை செய்ய முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory