» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி பினு போலீசில் சரண்: என்கவுண்ட்டர் பீதி..?

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 11:49:38 AM (IST)

சென்னையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி பினு இன்று திடீரென அம்பத்தூர் போலீசில் சரணடைந்தார். போலீஸ் என்கவுண்ட்டருக்கு அஞ்சியே அவர் சரணடைந்ததாக கூறப்படுகிறது.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பயங்கர ரவுடி பினு தனது கூட்டாளி பரிவாரங்களோடு மாங்காடு அருகே உள்ள வடக்கு மலையம்பாக்கத்தில் பெரியஅளவில் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடியபோது, ஒரேநேரத்தில் 75 பயங்கர ரவுடிகளை பட்டாகத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களோடு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்லு மதன் என்ற ரவுடியை சென்னை மத்திய குற்றப்பிரிவின் ரவுடி ஒழிப்பு போலீசார் பள்ளிக்கரணை பகுதியில் மடக்கிப்பிடித்தனர். பல்லு மதன் வெளியிட்ட தகவலின் அடிப்படையில்தான் வடக்கு மலையம்பாக்கத்தில் 75 ரவுடிகளை போலீசார் கூண்டோடு பிடித்தனர்.சென்னையில் ஒரே இடத்தில் கைது செய்யப்பட்ட ரவுடிகளிடம் விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. சென்னையில் வாழும் பெரும்பாலான ரவுடிகள் அரசியல்வாதிகளின் அரவணைப்பில் வாழ்வதாக தெரிய வந்துள்ளது.

ரவுடி பினு கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் கவுரவமான குடும்பம். அவரது முதல் மனைவி இறந்துபோனார். தற்போது 2-வதாக ஒரு பெண்ணை காதலித்து பினு திருமணம் செய்துள்ளார். கராத்தே வீரரான பினு முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஒருவரின் ஆதரவோடு ரவுடியாக மாறிவிட்டதாக கூறப்பட்டது.ரவுடி பினுவை போலீசார் சுட்டு பிடிக்க திட்டமிட்டு இருந்தனர்.இந்த நிலையில் இன்று திடீரென பினு சென்னை அம்பத்தூர் போலீசில் சரணடைந்துள்ளார். போலீசாரின் என்கவுண்ட்டருக்கு அஞ்சியே பினு போலீசில் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் வலம் வரும் மற்றொரு ரவுடியான அரும்பாக்கம் ராதாகிருஷ்ணனை பிறந்த நாளுக்கு வரவழைத்து போட்டுத் தள்ள பினு திட்டமிட்டிருந்தார். ஆனால் ராதாகிருஷ்ணன், பினு பிறந்த நாள் பார்ட்டிக்கு செல்லாமல் தப்பிவிட்டார். தற்போது போலீசிடம் சரணடைந்துள்ள பினுவிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். பினு இதுவரை செய்த கொலைகள், அவருக்கு ஆதரவாக இருக்கும் பிரமுகர்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory