» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நான் தொடங்க உள்ள கட்சி 3 தலைமுறைக்காவது பயன்பட வேண்டும்: கமல்ஹாசன் பேச்சு

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 11:32:43 AM (IST)

நான் தொடங்க உள்ள கட்சி 3 தலைமுறைக்காவது பயன்படும் சமுதாயக் கருவியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக அமெரிக்காவாழ் தமிழர் கள் மத்தியில் கமல்ஹாசன் கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசி வருகிறார். ரஜினியுடன் கூட்டணி அமைப்பதா, இல்லையா என்பது பற்றியும், வரும் 21-ம் தேதி தொடங்க உள்ள கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் அதில் பேசி வருகிறார். இந்நிலையில், அமெரிக்கா வின் லெக்சிங்டன் நகர் மற்றும் அதைச் சுற்றி தமிழர்கள் வசிக் கும் இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசியதாவது:

நான் என் தனிப்பட்ட வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு கடமை செய்ய வந்திருப்பதுபோல, ஒவ்வொரு தமிழரும் நாட்டுக்காக கடமை ஆற்ற தயாராக வேண்டும். நான் வெறும் கலைஞனாக மட்டுமே இருந்துவிட்டு இந்த மண்ணைவிட்டு பிரியமாட்டேன். ஏனென்றால், வெறும் கலைஞனாக மட்டுமே இருப்பது எனக்கு போதவில்லை. நான் தொடங்க உள்ள கட்சி யில் பணியாற்ற யாரும் வரலாம். அதற்காகத்தான் ‘மய்யம்’ என்ற இணையவழியை உருவாக்கியுள்ளேன். அதன் வழியாக கட்சி யின் பெயர், வண்ணம் உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் வரும் 21-ம் தேதி இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்த உள்ளேன். அதில் உங்கள் அனைவரது பங்கும் இருக்க வேண்டும். நம் எல்லோருக்குமே கடமை இருக்கிறது. இது நீண்ட பயணமாக இருக்க வேண்டும். அது தமிழர்களுக்கான பயனாக இருக்க வேண்டும். அந்த பயனிலும், பயணத்திலும் நானும் நடந்தேன் என்பது எனக்கும் பெருமை. 

நான் தொடங்க உள்ள கட்சி 3 தலைமுறைக்காவது பயன்படும் சமுதாயக் கருவியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இங்கு தமிழ் இருக்கை அமை வது ஹார்வர்டுக்கும் பெருமை. தமிழர்களுக்கும் பெருமை. இரு தரப்பினரும் அதை பெருமையாக நினைக்க வேண்டும். ராமேசுவரத்தில் தொடங்கி அடுத்தடுத்து செயல்பட உள்ள அரசியல் பணிகளில், மதுரைக்கு வந்து சில செயல்பாடுகள் குறித்து பேச உள்ளேன். அதில் கல்வித் தரத்தை உயர்த்துவது, எளிய வழியில் மக்களுக்கு தரமான மருத்துவம் கிடைக்கச் செய்வது என்பது குறித்தும் பேச உள்ளேன். அதையும் 5 ஆண்டு கால திட்டமாக அறிவிக்க உள்ளேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.


மக்கள் கருத்து

ஒருவன்Feb 13, 2018 - 04:29:49 PM | Posted IP 117.2*****

ஒழுங்கா கட்சி ஆரம்பிசிட்டு தொலையுங்கடா .. வாயால் கவிதை வடை சுடுபவன் கூத்தாடி ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory