» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம்: சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்

திங்கள் 12, பிப்ரவரி 2018 11:24:12 AM (IST)தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். 

தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். இந்த உருவப்படம் 7 அடி உயரம் மற்றும் 5 அடி அகலம் கொண்டது.  பச்சை நிற சேலையுடன் அவர் நிற்பது போன்று உருவப்படம் வரையப்பட்டு உள்ளது.  சட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளுவர், காந்தி, ராஜாஜி, காமராஜர், பெரியார், அண்ணா, காயிதே மில்லத், முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர். மற்றும் அம்பேத்கர் ஆகியோரது உருவப்படங்கள் அவையில் வைக்கப்பட்டு உள்ளன.  இது முதல் பெண் தலைவரின் படம். மு.க. ஸ்டாலின் இருக்கைக்கு எதிரே ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்கப்பட்டு உள்ளது.  இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory