» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போலி ஐடி அதிகாரி போலீசில் சரண்: நாடகமாடிய தீபா கணவர் மாதவன் மீது பரபரப்பு புகார்!!

திங்கள் 12, பிப்ரவரி 2018 10:33:40 AM (IST)

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வீட்டிக்குள் வருமானவரித்துறை அதிகாரி என்ற பெயரில் நுழைந்தவர் நேற்று போலீஸில் சரணடைந்தார். தீபா கணவர் மாதவன் எடுக்க போகும் சினிமா வாய்ப்புக்காக நடித்ததாக பிரபாகரன் வாக்குமூலம் அளித்துள்ளார். 

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவின் வீடு, சென்னை தி. நகரில் உள்ளது. கடந்த சனிக்கிழமை வருமானவரித்துறையின் துணை ஆணையர் மித்தேஷ் குமார் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபர், அந்த வீட்டைச் சோதனையிட வந்திருப்பதாகக் கூறினார். தகவல் அறிந்த செய்தியாளர்களும், போலீஸாரும் அங்கு வந்ததால் பதற்றமடைந்த அந்த நபர், திடீரென சுவரேறிக் குதித்து தப்பி ஓடினார். இந்த சம்பவத்திற்கு முன்பே, தீபாவின் வீட்டு கண்காணிப்புக் கேமராக்கள் அனைத்தும் வேறு திசையில் திருப்பி வைக்கப்பட்டிருந்தது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், நேற்று இரவு சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் சரணடைந்த போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம் அளித்தார். மாம்பலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள பிரபாகரன் வீடியோ ஒன்றையும் போலீசிடம் கொடுத்துள்ளார். சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி வருமான வரி அதிகாரி போல் மாதவன் நடிக்க சொன்னதாக பிரபாகரன் கூறியுள்ளார். போலீசாரை பார்த்ததும் தீபா கணவர் மாதவன் என்னை தப்பியோடச் சொன்னதாக என்றும் அவர் கூறியுள்ளார். பிப்ரவரி 10-ஆம் தேதி தி.நகரில் ஜெயலலிதா தீபா வீட்டில் சோதனை நடத்த வந்த போலி வருமான வரி அதிகாரி தப்பியோடினார். 

பிரபாகரனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தான் விழுப்புரத்தைச் சேர்ந்தர் என்றும், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் ஹோட்டல் நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தனது கடைக்கு தீபாவின் கணவர் மாதவன் அடிக்கடி வந்ததாகக் கூறிய பிரபாகரன், சினிமாவில் நடிக்கவைக்க வாய்ப்புத் தருவதாக மாதவன் கூறியதாகவும் தெரிவித்தார். வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்குமாறு கூறி, கூரியர் மூலம் அடையாள அட்டையை அனுப்பியதாகவும், அதனை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வருமாறு மாதவன் தன்னிடம் கூறியதாக பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மாதவன் கூறியதால் அவரது வீட்டுக்கு தான் சென்றதாகவும், அவர் கூறியபடியே தான் நடந்து கொண்டதாக கூறிய பிரபாகரன், சோதனைக்கான ஆவணத்தையும் மாதவனே வழங்கி, பின் தீபாவுக்கும் போன் செய்து வருமான வரித்துறை சோதனை நடப்பதாக கூறியதாகவும் பிரபாகரன் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தீபாவின் வழக்கறிஞர், ஊடகங்கள் மற்றும் போலீசார் வந்ததால் தனக்கு மிகவும் பதற்றம் ஏற்பட்டதாகவும், அதனை மாதவனிடம் கூறியபோது, அருகில் இருந்த சந்துப் பகுதி வழியே தன்னை தப்பிச் செல்லுமாறு அவர் கூறியதாகவும் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வருமானவரித்துறை சோதனை நடத்தப்படுவதாகக் கூறி தீபாவிடம் பணம் பறிப்பதற்காக மாதவன் தன்னை பயன்படுத்திக் கொண்டதாகவும், அதன் பின்னரே தான் போலீஸில் சரணடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே பிரபாகரன் சரணடைந்த செய்தி கேட்டு, நேற்றிரவு செய்தியாளர்கள் மாதவனைச் சந்திக்க முயன்றனர். ஆனால் செய்தியாளர்களைச் சந்திக்க மறுத்த அவர் தீபாவின் வீட்டிலிருந்து அவசரம் அவசரமாக வெளியேறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory