» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது : டி.கே. ரங்கராஜன் ட்விட்டரில் பதிவு

வியாழன் 11, ஜனவரி 2018 6:20:27 PM (IST)

அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததாக சி.பி.எம்.,மாநில நிர்வாகி டி.கே., ரங்கராஜன் அவரது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 8 நாட்களாக தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராடி வருகின்றனர்.இதில் நீதிமன்றம் பொங்கலை கருத்தில் கொண்டு தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என அறிவித்தது.மேலும் அரசு பேருந்து தொழிலாளர் சம்பள பிரச்னை தொடர்பாக பேச்சு நடத்தி நல்ல முடிவு எடுப்பதற்காக, மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை சென்னை உயர்நீதிமன்றம் நியமனம் செய்துள்ளது.  இதனை தொடர்ந்து அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததாக சி.பி.எம்.,மாநில நிர்வாகி டி.கே., ரங்கராஜன் அவரது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். உறுதியாக போராடிய தொழிலாளர்கள் அனைத்து பிரிவினருக்கும் நன்றியும் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory