» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சபாநாயகர் தனபால் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை : டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

வியாழன் 11, ஜனவரி 2018 1:49:40 PM (IST)

சபாநாயகர் தனபால் நடுநிலையுடன் நடந்து கொள்ளவில்லை என டிடிவி தினகரன் எம்எல்ஏ.,குற்றம்சாட்டினார்.

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ., டிடிவி தனது தொகுதி குறித்து பேச முயன்ற போது அவருக்கு பேச வாய்ப்பளி க்கவில்லை. இதனை கண்டித்து தினகரன் மற்றும்ஆதரவு எம்எல்ஏ., கள் வெளிநடப்பு செய்தனர்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி, நேற்று வரை வாய்ப்பளிப்பதாக கூறிவிட்டு இன்று அனுமதி மறுத்து விட்டார்கள். சபாநாயகர் தனபால் நடுநிலையுடன் நடந்து கொள்ளவில்லை. வாய்ப்பு கிடைத்தால் ஆர்.கே.நகர் மக்களின் பிரச்சனை குறித்து பேச இருந்தேன் என்றும் தினகரன் கூறினார்.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory