» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனுவில் குளறுபடி செய்துள்ளனர் : ஜெ.தீபா புகார்

வியாழன் 7, டிசம்பர் 2017 7:06:31 PM (IST)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக, தாக்கல் செய்த வேட்புமனுவில் குளறுபடி செய்துள்ளனர் என்று  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் ஜெயலலிதா வின் அண்ணன் மகள் ஜெ. தீபா புகார் கொடுத்துள்ளார். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தீபா போட்டியிட வேண்டி வேட்புமனுதாக்கல் செய்தார். வேட்புமனுவில் உள்ள 26 ஐ என்ற பிரிவை தீபா முழுமையாக பூர்த்தி செய்யவில்லை . வேட்பாளரின் குற்றப்பின்னணி பற்றிய விவரங்களும், சொத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டிய 26 வது பிரிவைப் பூர்த்தி செய்யாததால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து தீபா பேசினார். 

இந்த சந்திப்பின் போது தமது வேட்புமனுவை நிராகரித்தது குறித்து லக்கானியிடம் தீபா புகார் மனு அளித்துள்ளார். தமது வேட்புமனுவை யாரோ மாற்றிவிட்டதாகவும் தான் வேட்புமனுவில் எதையும் பூர்த்தி செய்யாமல் விடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory