» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காற்றழுத்த தாழ்வு நிலை ஆந்திரா,ஒடிசா நோக்கி நகர்கிறது : வானிலை மையம் தகவல்

வியாழன் 7, டிசம்பர் 2017 2:19:15 PM (IST)

அந்தமான் அருகே உண்டான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களை  நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் நகர்ந்து  வடக்கு ஆந்திரா - ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கக் கடலில் மசூலிப்பட்டினத்தில் இருந்து 875 கி.மீ. தொலைவில் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது நிலை கொண்டுள்ளது.இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 10ம்தேதி வரையிலான காலக்கட்டத்தில் வடக்கு ஆந்திரா - ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக் கூடும். 

இதனால் வட தமிழகம் மற்றும் ஆந்திர மீனவர்கள் வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்பகுதி மீனவர்கள் வரும் 8 மற்றும் 9 தேதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory