» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடந்த ஆண்டு ஜெயலலிதாவை இழந்தோம். இந்தாண்டு ஜனநாயகத்தை இழந்தோம் : விஷால்

புதன் 6, டிசம்பர் 2017 1:43:20 PM (IST)

சென்ற ஆண்டு ஜெயலலிதாவை இழந்தோம். இந்தாண்டு ஜனநாயகத்தை இழந்துள்ளோம் என நடிகர் விஷால் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் தற்போது அரசியலில் இறங்கியுள்ளார். இதற்கு முன் நடிகர் சங்கத்தேர்தல், தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்றார். இதனையடுத்து தற்போது ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், கையெழுத்து போலி என கூறி மனுவை தேர்தல் ஆணையம் நிரகரித்தது விஷாலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி நடிகர் விஷால் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ஜனநாயகம் மலிந்து விட்டது என்றும் நாமினேஷனில் இதயமற்ற செயல் அரங்கேறியது. கடந்த ஆண்டு 5ம் தேதி அம்மாவை (ஜெயலலிதா) இழந்தோம். இந்த ஆண்டு 5ம் தேதி ஜனநாயகத்தை இழந்துவிட்டோம் என்றும் தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து

தமிழன்Dec 7, 2017 - 10:24:45 AM | Posted IP 157.5*****

உண்மைதான் ஜெயலலிதா அவர்கள் இருந்திருந்தால் உன்னை மாதிரி சுயநலம் பிடித்த, வேஷம் போடும் சினிமாக்காரன் எல்லாம் இப்படி பேசமுடியுமா?

உண்மைதான்Dec 6, 2017 - 06:38:51 PM | Posted IP 117.2*****

உண்மைதான் ஜெயலலிதா இருந்து இருந்தால் தலைமை செயலகத்தில் முதல்வர் இருக்கும் போது IT raid பண்ணியிருக்கமுடியுமா அல்லது நீட் க்கு இந்த வருடம் விலக்கு என்று நிர்மலா சீத்தாராமன் சொல்லி விட்டு பின்பு டெல்லி நீதிமன்றத்தில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசால் வாதிட தான் முடியுமா?

பாலாDec 6, 2017 - 05:05:27 PM | Posted IP 61.14*****

உண்மைதான் ஜெயலலிதா இருந்து இருந்தால் டுமிழிசை ராஜா வாயை திறந்து இருப்பார்களா.

உண்மைDec 6, 2017 - 01:50:26 PM | Posted IP 122.1*****

ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருந்து இருந்தால் உன்ன மாதிரி கூத்தாடி எல்லாம் இப்படி வெட்டி பந்தா பண்ண முடியுமாடா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory