» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மிட்டாய் வாங்கிக் கொடுத்து சிறுமி பாலியல் பலாத்காரம்: சினிமா துணை நடிகர் உள்பட 2 பேர் கைது

புதன் 6, டிசம்பர் 2017 9:06:32 AM (IST)

மிட்டாய் வாங்கிக் கொடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சினிமா துணை நடிகர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரையை அடுத்த சோழவந்தான் அருகிலுள்ள முள்ளிப்பள்ளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பக்தன் என்கிற நாச்சியப்பன்(45). இவர் எலி உள்ளிட்ட சினிமா படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் துணை நடிகராக நடித்து உள்ளார். இவர் ஒரு சிறுமியை ஏமாற்றி மிட்டாய் மற்றும் பலகாரம் வாங்கிக் கொடுத்து கடந்த 1–மாதத்திற்கு மேலாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். 

மேலும் இதை பார்த்த தென்கரையை சேர்ந்த டிரைசைக்கிள் ஓட்டுனரான மணிகண்டனும்(28) சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சமயநல்லூர் டிஎஸ்பி மோகன்குமார் உத்தரவின்படி சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியாபாய் வழக்குபதிவு செய்து பக்தன் என்கிற நாச்சியப்பன் மற்றும் மணிகண்டன் ஆகியோரை கைது செய்தார். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


மக்கள் கருத்து

NomanDec 6, 2017 - 11:28:44 AM | Posted IP 82.19*****

manidha uruvil ulla mirugangal.. manam thirumbungal

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory