» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இளைஞர்கள் தேர்தலில் நிற்கக்கூடாதா ? : சாலை மறியல் செய்து நடிகர் விஷால் ஆவேசம்

செவ்வாய் 5, டிசம்பர் 2017 6:16:41 PM (IST)

தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் நடிகர் விஷால் சென்னையில் சாலை மறியல் செய்து வருகிறார்.

ஆர்.கே.நகரில் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், தினகரன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. சுயேட்சைகள் பலரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதில் போட்டியிடும் நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அவரது வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. 

இதனிடையே தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் நடிகர் விஷால் சாலை மறியல் செய்து வருகிறார்.அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இது குறித்து பேசிய விஷால் இளைஞர்கள் தேர்தலில் நிற்கக்கூடாதா? எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதில் நியாயமில்லை என தெரிவித்தார்.


மக்கள் கருத்து

சுடலைDec 6, 2017 - 10:39:39 AM | Posted IP 125.1*****

35வயது வரைதான் இளைஞ்சர். அதன் பின் கிழவன்

ராமநாதபூபதிDec 6, 2017 - 09:50:17 AM | Posted IP 103.3*****

அரசியல் வாதிகள் செய்யவேண்டியதை செய்தால் நான் ஏன் தேர்தலில் நிற்கப்போகிறேன் என்று சொன்னார் விஷால். இன்று செய்ய வேண்டியதை செய்து விட்டார்கள். போதுமா விஷால்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory