» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போலி கையெழுத்துகள் கண்டுபிடிப்பு எதிரொலி: நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு!

செவ்வாய் 5, டிசம்பர் 2017 5:46:35 PM (IST)

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது மனு நிராகரிக்கப்பட்டது.  

ஆர்.கே.நகரில் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. 131 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. 

திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், தினகரன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. சுயேட்சைகள் பலரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நடிகர் விஷால் வேட்புமனுவை ஏற்பதில் தொடக்கம் முதலே நீடித்தது. விஷாலின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என அதிமுக, திமுக வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விஷால் மனுவில் கணக்கு, உறுதிமொழி சரியாக இல்லை என புகார் கூறினார். 

இதனையடுத்து விஷாலின் வேட்புமனு பரிசீலனை செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையே தீபாவின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். அவரது வேட்புமனுவில் பல படிவங்கள் நிரப்பப்படவில்லை என கூறப்பட்டது. பின்னர் விஷாலின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. அவரது வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. போலி கையெழுத்துகளுடன் வேட்புமனுவைத் தாக்கல் செய்ததால் விஷால் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory