» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனக்குத்தானே தீ வைத்து கொண்டு நாடகமாடிய மாணவர் : திருப்பத்துாரில் பரபரப்பு சம்பவம்

செவ்வாய் 14, நவம்பர் 2017 2:24:26 PM (IST)

திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவனை கடத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில் மாணவன் தனக்கு தானே தீ வைத்து கொண்டது தெரிய வந்தது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா ஜோன்றம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி. இவரது மகன் கோவிந்தன் (13).இவர் திருப்பத்தூர் வெங்களாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வந்தார். இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது நேதாஜிநகர் என்ற இடத்தில் வந்தபோது அவரை 2 பேர் மடக்கி கோவிந்தனை குண்டு கட்டாக தூக்கி அருகே இருந்த மாந்தோப்புக்குக்குள் சென்றதாகவும் மேலும் பெட்ரோலை அவரது உடலில் ஊற்றி தீவைத்ததாகவும் கூறப்பட்டது.

காயமடைந்த மாணவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் போலீசார் மாணவரிடம் நடத்திய விசாரணையில் பள்ளி மாணவன் கோவிந்தன், தனக்கு தானே தீ வைத்து கொண்டது தெரிய வந்துள்ளது .சக மாணவனின் பர்சை திருடிய கோவிந்தனை ஆசிரியர் கண்டித்ததால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory