» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறப்பு காவல் படையினர் தயார் நிலையில் இருக்க டிஜிபி திடீர் உத்தரவு: தமிழகம் முழுவதும் பதற்றம்

செவ்வாய் 26, செப்டம்பர் 2017 3:32:21 PM (IST)

தமிழகம் முழுவதும் சிறப்பு காவல் படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக டிஜிபி அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விதமான சிறப்புக் காவல் படைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று இதன் மூலம் அறிவுறுத்தபப்டுகிறது. குறிப்பாக 19 மாவட்டங்களில் உள்ள சிறப்புக் காவல் படைகள் உச்ச பட்ச தயார் நிலையில் இருக்க வேண்டும். 

இந்த தகவலானது மாநகர காவல்துறை ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் வழி அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக அசாதாரணமான சூழ்நிலைகளில்தான் இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்பதால் காவல்துறை வட்டாரங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory