» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு மருத்துவமனை அலட்சியத்தால் கல்லூரி மாணவர் உயிரிழந்த பரிதாப சம்பவம்

ஞாயிறு 17, செப்டம்பர் 2017 1:02:34 PM (IST)

அரசு மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவமனை தவறினால் பாம்பு கடித்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா இதம்பாடல் கிராமத்தை சேர்ந்த ஹிதாயதுல்லாவின் மகன் முஹம்மது இர்ஃபான் (19). இவர் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15ம் தேதி இரவு 11 மணியளவில் முஹம்மது இர்ஃபான் வீட்டில் உறங்கி கொண்டிருந்தார். அப்போது கட்டுவிரியன் பாம்பு  அவரது முதுகில் கடித்தது.

இதம்பாடல் கிராமத்தில் மருத்துமனையோ அல்லது முதல் உதவி செய்ய ஏற்பாடோ இல்லாமையால் அவரது தாய் மாமன் முஹம்மது அல்லாபிச்சை,  உடனடியாக ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதர மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு முதல் உதவி செய்ய  மருத்துவர் இல்லாததால் முதல் உதவி செய்ய முடியவில்லை. கீழக்கரை அரசு தாலுகா மருத்துமனைக்கு கொண்டு சென்றனர் அங்கும் மருத்துவர் இல்லை. செவிலியர்கள் மட்டும் முதல் உதவி செய்தனர். நிலைமை மோசமானதால் இராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இரவு 12.00 மணியளவில் கொண்டு சென்றனர். அங்கும் மருத்துவர்கள் யாரும் இல்லை.

இந்நிலையில், அதிகாலை 3.30 அளவில் முஹம்மது இர்ஃபான் உயிர் பிரிந்தது. பாம்பு  கடித்த 10நிமிடத்தில் ஆரம்ப சுகாதர மருத்துமனைக்கும், பிறகு 15 நிமிடத்தில் தாலுகா அரசு மருத்துமனைக்கு சென்ற பொழுதிலும் மருத்துவர்கள் இல்லை என்பது தான் மாவட்ட நிர்வாகத்தின் அவலநிலை. இந்த மரணத்திற்கு காரணம் இராமநாதபுரம் மாவட்ட அரசு நிர்வாகம் தான் என இறந்து போன கல்லூரி மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


மக்கள் கருத்து

IrfhanSep 18, 2017 - 03:15:11 PM | Posted IP 42.11*****

அலட்சியம்

A.Mohamed TharikSep 18, 2017 - 10:49:06 AM | Posted IP 106.7*****

Udanadiya government Hospital ithambadal place kanndippa varanum irfan ennoda friend ervadila ulla government Hospital seri illa anga nurse um illa,doctor um varathu illa irfan oda mudiyatum ini yarukum intha nelama varakudathu ithu tha ennoda karuthu

ரசூல் அஹமத்Sep 17, 2017 - 04:07:18 PM | Posted IP 188.7*****

அரசு மருத்துவமனைகள் இந்த நிலை இல் தான் இயங்கிக்கொண்டிருகின்றன இரவு, பகல், என இரண்டு மருத்துவர்களை நிய மித்து மற்றும் மருத்துவர்கள் அலச்சியம் இல்லாமல் செயல்பட்டால் இது போன்ற இறப்புகளை தவிர்க்கலாம்மேலும் அந்த இதம்பாடல் கிராமத்தில் முதலுதவி சிகிச்சை மையம் அமைப்பது அரசின்கடமையகும்இதர்க்கு அரசு முன்வரவேண்டும் நன்றி.

Hussain MubarakSep 17, 2017 - 01:18:51 PM | Posted IP 106.6*****

பாம்பு கடிக்கு சித்த மருத்துவத்தில் எளிதாக காப்பாற்றி இருக்கலாம். ஆங்கில மருத்துவம் வந்தபின் சித்த மருத்துவம் அழிந்து விட்டது. எனவே சித்த மருத்துவத்திற்கு முக்கியதுவம் கொடுங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory