» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சக்கம்மாள்புரம் பகுதியில் பிஎஸ்என்எல் புதிய கோபுரம் அமைக்க கோரிக்கை!

சனி 15, பிப்ரவரி 2025 12:32:16 PM (IST)

சக்கம்மாள்புரம் பகுதியில் பிஎஸ்என்எல் புதிய கோபுரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மத்திய திமுக துணைச்செயலாளர், முன்னாள் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் பல கிராமங்கள் உள்ளது. இங்கு தங்கம்மாள் புரத்தில் பிஎஸ்என்எல் உயர் செல்போன் கோபுரம் உள்ளது. இங்குள்ள விவசாயிகள், பெண்கள், வியாபாரிகள் மாணவர்கள் பலர் பிஎஸ்என்எல் செல்போன் சேவையை உபயோகித்து வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த வாரத்திலிருந்து சேர்வைக்காரன்மடம் பகுதியில் பிஎஸ்என்எல் 4G அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி வாலிபர்கள், பொதுமக்கள், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சக்கம்மாள்புரம் பகுதியில் புதிய கோபுரம் அமைக்கவேண்டும். இதனால் இப்பகுதியில் உள்ள நிறுவனங்கள், பொதுமக்கள் 4ஜி சேவையை நிறைவாக பயன்படுத்துவர். எனவே பிஎஸ்என்எல் உயர் அதிகாரிகள் இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

கந்தசாமிFeb 15, 2025 - 01:51:42 PM | Posted IP 172.7*****

ஊருக்கு ஒரு கோபுரமா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory