» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வாரத்திற்கு 5 நாட்கள் பணி அறிவிக்க கோரி வங்கி பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:52:34 PM (IST)



வாரத்திற்கு 5 நாட்கள் பணி அறிவிக்க கோரி தூத்துக்குடியில் அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாரத்திற்கு 5 நாட்கள் பணி அறிவிக்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தற்காலிக ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் பீச் ரோட்டில் உள்ள எஸ்பிஐ வங்கி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் பாங்க் ஆப் பரோடா வங்கி நிர்வாகி சன்னாசி வரவேற்றார். சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், மெல்பர் சுவியோ சிறப்புரை ஆற்றினர். கனரா பேங்க் நிர்வாகி ஜெயராம், தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகி தங்க மாரியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பெஞ்சமின், சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

பாதிக்கப்பட்டவன்Feb 14, 2025 - 09:20:39 PM | Posted IP 162.1*****

அதுக்கு பேசாமல் வேலையை விட்டு துரத்தி 24 மணி நேரம் உழைக்கும் ரோபோ மெஷின் வைக்கலாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory