» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வித்தியாசமான முறையில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்த கவுன்சிலர்: பொதுமக்கள் ஆர்வம்!

திங்கள் 23, டிசம்பர் 2024 8:35:50 AM (IST)



நாகர்கோவிலில் வித்தியாசமான முறையில் குடில் அமைத்துள்ளார். இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். 

கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே குடில் அமைப்பது வண்ண விளக்குகளால் அலங்கரிப்பது என கிறிஸ்தவர்கள் விமர்சையாக கொண்டாடுவது அதிலும் கிறிஸ்துமஸ் குடில்களை பொருட்களால் அமைப்பதுடன் களிமண் மற்றும் பிளாஸ்டிக் கால் செய்யப்பட்ட சொரூபங்களை குடிலில் வைப்பது வழக்கம். ஆனால் இவற்றிற்கு எல்லாம் மேலாக வித்தியாசமான முறையில் நாகர்கோவிலில் வீட்டில் குடில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் 7 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் விஜிலா ஜெயசிங். இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் விதத்தில் பிரம்மாண்ட குடில் ஒன்றை அமைத்துள்ளார். இந்த குடில் முற்றிலும் நூலால் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஊட்டியில் இருந்து பிரத்தேகமான நூல்களை வாங்கி கடந்த ஆறு மாத காலமாக இதனை செய்துள்ளார். குடிலை ஏராளமானோர் பார்த்து செல்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory