» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஏற்பாடுகள்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!
திங்கள் 16, டிசம்பர் 2024 11:48:23 AM (IST)
கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் அய்யன் திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் நடைபெறுவதையொட்டி அங்கு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு , பொதுப்பணித்துறை அரசு செயலாளர் மன்கத் ராம் சர்மா, மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, முன்னாள் அமைச்சர் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் இன்று (15.12.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.