» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை விடுதியில் விஷம் குடித்த பயிற்சி பெண் டாக்டர் சாவு
சனி 14, டிசம்பர் 2024 12:39:22 PM (IST)
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை விடுதியில் விஷம் குடித்த பயிற்சி பெண் டாக்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் மருத்துவம் படித்து வருகிறார்கள். படிப்பை நிறைவு செய்தவர்கள் பயிற்சி டாக்டர்களாக பணியாற்றி வருகின்றனர். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த இலங்கை வேந்தன் மகள் சாருமதி (22) என்பவர் பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். இதற்காக அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார்.
கடந்த 9-ந் தேதி சாருமதி மருத்துவமனையில் உள்ள விடுதியில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயிற்சி டாக்டர்கள் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அத்துடன் மயங்கி கிடந்த பயிற்சி டாக்டரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுபற்றி சாருமதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சாருமதியின் தந்தை இலங்கை வேந்தன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் சாருமதியை மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று சாருமதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் பயிற்சி டாக்டர் சாருமதி மனரீதியாக பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதனால் மன அழுத்தம் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
இலங்கைவேந்தன்Jan 13, 2025 - 12:06:37 AM | Posted IP 162.1*****
பயிற்சி அளிக்கும் மருத்துவர்கள் பெரும்பாலும் (60%) தேர்ச்சி தவறி தவறி பட்டம் பெற்றவர்களே
பயிற்சி மாணவர்களை மனம் நோகும்படி வசைபாடி , அவர்களை ஒருவித பய உணவர் உடன் நடத்துகிறார். இது வாழையடி வாழையாக நடப்பதாகவும், இந்த வித குருர எண்ணம் அவர்கள் (பயிற்சியாளர்கள்) மனதில் இருந்து விளங்க வேண்டும்.
இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க காரணமானவர்கள் மனசாட்சியே பதில் சொல்லும்.
இலங்கைவேந்தன்Jan 12, 2025 - 03:28:47 AM | Posted IP 172.7*****
இவர்களுக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சம் 12 மணி நேரம் மட்டுமே பயிற்சி அளிக்க வேண்டும்.மீதம் 12 மணி நேரம் கட்டாய ஓய்வு தேவை. முக்கிய காரணம்,
பயிற்சி மாணவர்களை நிறந்தர மருத்துவர்கள் அவமதிப்பதே முக்கிய காரணம்.
இது நன்றாக படிக்கும் மாணவர்கள் சிலர் மட்டுமே இந்த மாதிரி முடிவை எடுக்கின்றனர்.
இதற்கு காரணமாக இருந்த மருத்துவரின் மனசாட்சி சரியான பதில் சொல்லும்.
இலங்கைவேந்தன்Jan 16, 2025 - 07:14:58 PM | Posted IP 172.7*****