» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை : பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் ஆட்சியர் ஆய்வு

வெள்ளி 13, டிசம்பர் 2024 5:36:12 PM (IST)



பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

கன்னியாகுமரி மாவட்ட நீர்வளத்துறை சார்பில் திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டங்களை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (13.12.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் புயல் சின்னம் காரணமாக மழை பெய்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. எனவே மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்குட்பட்ட கடலோரப்பகுதிகள், மலை அடிவார பகுதிகள், தாழ்வான பகுதிகள், ஆற்றுப்படுகைகள், நீரேற்றபகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மழைநீர் உட்புகாதவாறு தடுப்புகள், மணல் மூடைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சாலையோரப் பகுதிகள், மலைப்பகுதிகள், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழமாலும், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றிட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை ஓரங்களில் உள்ள கழிவுநீர் ஓடைகளில் மழைநீர் தேங்காதவாறு தண்ணீர் செல்லும் வகையில் சுத்தம் செய்து சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டத்தினை ஆய்வு செய்ததோடு, அவ்வப்போது அணைகளின் நீர் இருப்பு, நீர் வரத்து அகியவற்றினை கண்காணிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. மேலும் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படின் அணையிலிருந்து வெள்ளநீர் மறுகால் திறந்து விட்டால் அதனால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்றும், மதகுகள் நல்ல நிலையில் உள்ளதா என்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, நீர்வளத்துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

உபரிநீர் வெளியேற்ற வேண்டியது இருந்தால் அதற்கு முன்னதாகவே பொதுமக்களுக்கு தகுந்த அறிவிப்புகள் வழங்கியும், நீர்நிலைகள் தாழ்வான பகுதிகளின் அருகாமையில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவுகள், குடிநீர், கழிப்பறைகள் உள்ளிட்ட அத்தியாவாசிய தேவைகளை நிறைவேற்றுவதோடு, தேவையான அளவு இருப்பு வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்கள். ஆய்வுகளில் அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory