» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அத்தியாவசிய உணவு, விவசாய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி விலக்கு: விஜய்வசந்த் எம்.பி கோரிக்கை

திங்கள் 9, டிசம்பர் 2024 12:29:19 PM (IST)

அத்தியாவசிய உணவு, விவசாய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி விலக்கு அளிக்க வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளார். 

விவசாய விளை பொருட்கள் மற்றும் அத்தியாவசியமான உணவு வகைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளார்.

பாமர மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் ஆட்டா, மைதா, ரவை, கடலை மாவு போன்ற உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளித்து ஏழைகளுக்கு அரசு உதவ வேண்டும்.  அதுபோன்று விவசாயத்திற்கு பயன்படும் இயந்திரங்களுக்கும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும்.

இது நலிந்து வரும் விவசாயிகளை காப்பாற்ற பெரிதும் உதவும். அத்தியாவசிய உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி ஏழை மக்களையும், விவசாய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விவசாயிகளையும் மிகவும் பாதிக்கின்றன. மேலும் மத்திய அரசு விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் உதவும் வண்ணமாக கூடுதல் நிதி வழங்க வேண்டும். கிசான் சம்மான் நிதி திட்டம், நீர் பாசன திட்டங்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சிக்கு அதிகமான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என  கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory