» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடிக்கு அமோனியம் நைட்ரேட் ஏற்றி வந்த ரஷிய கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது!
வெள்ளி 11, அக்டோபர் 2024 8:34:07 AM (IST)
ரஷியாவில் இருந்து தூத்துக்குடிக்கு அமோனியம் நைட்ரேட் ஏற்றி வந்த கப்பலால் பரபரப்பு ஏற்பட்டது. ஊழியர்கள் எதிர்ப்பால் அந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு ரஷியாவில் இருந்து வெடிமருந்து தயாரிக்க பயன்படும் 10 ஆயிரம் டன் அமோனியம் நைட்ரேட் என்னும் ரசாயன பொருளை ஏற்றிக் கொண்டு ஒரு கப்பல் கடந்த 20-ந் தேதி வந்தது. இந்த ரசாயன பொருட்களை இதுவரை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கையாளவில்லை.
மேலும் தூத்துக்குடியில் இறக்கி, கன்டெய்னர் மூலம் மும்பை, நாக்பூருக்கு சாலை அல்லது ரெயில் மூலம் கொண்டு செல்ல இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த கப்பலை தூத்துக்குடி துறைமுகத்துக்குள் அனுமதிக்க கூடாது என்று ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பேரில் 2 நாட்கள் கடலில் நின்ற அந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது. இந்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
உண்மை விளம்பிOct 11, 2024 - 06:30:42 PM | Posted IP 172.7*****
எதிர்ப்பு தெரிவித்த துறைமுக ஊழியர்களுக்கு நன்றி. இது போன்று எந்தவொரு வெடி மருந்துகள், கெமிக்கல்ஸ் வந்தாலும் அதை விரட்டியெடுக்க வேண்டும். தூ.டி துறைமுகம் என்ன அவர்கள் குப்பை கொட்டும் இடமா!
தமிழன்Oct 11, 2024 - 10:34:22 AM | Posted IP 172.7*****
"கன்டெய்னர் மூலம் மும்பை, நாக்பூருக்கு சாலை அல்லது ரெயில் மூலம் கொண்டு செல்ல இருந்ததாக கூறப்படுகிறது" ஆனான் வட நாட்டவனுக்கு இங்கே என்ன வேலை? மும்பை துறைமுகத்தில் போக வேண்டியது தானே.
உண்மை விளம்பி அவர்களேOct 11, 2024 - 08:37:10 PM | Posted IP 172.7*****