» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயார் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!

புதன் 9, அக்டோபர் 2024 3:15:30 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையி்ல் பக்கிள் ஓடை மற்றும் உப்பாத்து ஓடையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக மேயர் தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள நான்கு மண்டல அலுவலகங்களிலும், புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி மில்லர்புரத்தில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். துணை ஆணையர் ராஜாராம், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: மேற்கு மண்டலத்தில் இது 4-வது வாரமாக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த மண்டலத்தில் 251 மனுக்கள் பெறப்பட்டதில் 245 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதி 6 மனுக்களில் ஆவணங்கள் குறைப்பாடுகள் இருந்ததால், அதை நிறுத்தி வைத்துள்ளோம். குறைகள் தீர்க்கப்பட்டதும் முழுமையாக அந்த மனுக்களுக்கும் தீர்வு காணப்படும். 

தமிழக முதலமைச்சரின் சீறிய திட்டமான "மக்களுடன் முதல்வர்” ஊராட்சி பகுதியில் நடைபெறுகிறது. இந்த மாநகராட்சியிலும் பலர் இ-மெயில் மூலம் குறைகளை தெரிவித்து வந்தன. மாநகராட்சி அலுவலகங்களில் உள்ள புகார் பெட்டியில் மனுக்கள் மூலமாக குறைகளை தெரிவித்து வந்தனர். இருப்பினும் சில குறைகளை தீர்ப்பதற்கு மண்டல அலுவலகத்திற்குதான் வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. 

அதனால் ஒவ்வொரு புதன்கிழமையிலும் மண்டல அலுவலகங்களில் சுழற்சி முறையில் நடைபெறுகின்ற குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.  குறிப்பாக முதல் கூட்டத்தில் 100 மனுக்களும், இரண்டாவது கூட்டத்தில் 75 மனுக்களும், மூன்றாவது கூட்டத்தில் 51 மனுக்களும் பெறப்பட்டுள்ளது. இன்று பெறப்படும் மனுக்களில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட சில மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். மற்ற மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும். 

வடகிழக்கு பருவமழையில் எதிர்கொள்ளுவதற்கு பக்கிள் ஓடை 6 கி.மீ தூரம் தூர்வாரும் பணிகளும், இதைபோல் உப்பாத்து ஓடை பகுதியில் தூர்வாரும் பணிகளும் நடைபெறுகின்றன. இந்த மண்டலத்திற்குட்பட்ட பல பகுதிகளில் புதிதாக சாலைகளும், கால்வாய் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவில், பள்ளி, கல்லூரி உள்ள பகுதிகளில் முழுமையாக சாலை பணிகளை செய்துள்ளோம். எல்லா பகுதிகளிலும் முறையாக பணிகள் நடைபெறும் என்று கூறினார். 

34வது வார்டு கவுன்சிலரும், பணிநியமனக்குழு உறுப்பினருமான சந்திரபோஸ் அளித்த கோரிக்கை மனுவில் "கடந்த மழைக்காலத்தில் எனது வார்டு பகுதியான பசும்பொன் நகர், 3வது மைல், புதுக்குடி, கந்தன்காலனி, ஆசிரியர் காலனி, தபால்தந்தி காலனி, அசோக்நகர், ராஜீவ்நகர், தேவகி நகர் ஆகிய தெருக்கள் முழுவதும் மழை வெள்ளத்தால், சாலைகள், வீடுகள் மழைநீரில் சூழ்ந்து பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். எனவே மழை நீரானது வடிகாலுக்கு செல்லும் வகையில் மழைக்காலம் வருவதற்குள் ஆய்வு செய்து வடிகால் வசதி செய்து தர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

முகாமில் பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் மகேந்திரன், மாநகராட்சி சுகாதார நகர் நல அலுவலர் வினோத்ராஜா, ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மண்டல தலைவர் அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளர் ரவீந்தீரன், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், இசக்கிராஜா, சரவணகுமார், ராமர், கனகராஜ், விஜயலெட்சுமி, பொன்னப்பன், கந்தசாமி, ஜாண், வட்ட செயலாளர் சுப்பையா, வட்ட பிரதிநிதி ஜெபகுமார் ரவி, மாற்றுதிறனாளிகள் நலச்சங்க தலைவர் மருதபெருமாள், பி.ஜே.பி.பொய்சொல்லான், போல்பேட்டை பகுதி தி.மு.க பிரதிநிதி ஜோஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 


மக்கள் கருத்து

RajaOct 10, 2024 - 05:18:35 PM | Posted IP 162.1*****

சங்கரப்பேரி பகுதியில் ஜோதி நகர் இணைப்பு சாலை என்ற சாலையை மட்டும் மாநகராட்சி சார்பில் செய்து தரப்பட்டுள்ளது ஆனால் சாலையில் யாரும் செல்ல மாட்டார்கள் பயன்படுத்தவே மாட்டார்கள் மக்கள் பயன்படுத்தும் சாலைகளை இதுவரை சாலை வசதி ஏற்படுத்தி தரவில்லை

BalaOct 10, 2024 - 05:15:56 PM | Posted IP 172.7*****

சங்கரப்பேரி தூத்துக்குடி மாநகராட்சியில் வார்ட் எண் ஒன்றில் உள்ளது சங்கரப்பேரி பகுதியில் இதுவரை எந்த ஒரு சாலையும் முறையாக சாலை வசதி செய்யவில்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory