» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கவிமணி மணிமண்டபம் பணிகள் விரைந்து முடிக்கப்படும்: இணை இயக்குநர் தகவல்!

திங்கள் 7, அக்டோபர் 2024 4:05:58 PM (IST)



தோவாளையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டபத்திற்கான பணிகளை விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நினைவகங்கள் இணை இயக்குநர் கு.தமிழ் செல்வராஜன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம், தோவாளை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் மணிமண்டபத்தினை செய்தி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குநர் (நினைவகங்கள்) கு.தமிழ்செல்வராஜன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் "கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் கிராமத்தில் சிவதாணுப்பிள்ளை – ஆதிலெட்சுமி இணையருக்கு 1876 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் நாள் மகனாக பிறந்தார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. 

கவிமணி சிறந்த தமிழறிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் குழந்தை பாடல்கள் எழுதியவர். அன்னாருடைய இலக்கிய பணிகளை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் தோவாளையில் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அவர்களுக்கு முழுதிருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க ரூ.92 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 16.06.2020 அன்று பணிகள் துவங்கப்பட்டது.

தற்போது சில காரணங்களால் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுவதை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, கூடுதலாக நிதி ஒதுக்கீடு பெற்று, உடனடியாக பணிகளை விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

ஆய்வில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) எஸ்.செல்வலெட் சுஷ்மா, தோவாளை ஊராட்சிமன்ற தலைவர் நெடுஞ்செழியன் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory