» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ராட்சத அலை இழுத்துச்சென்றதில் மாணவர் பரிதாப சாவு: அஞ்சுகிராமம் அருகே சோகம்!

வியாழன் 19, செப்டம்பர் 2024 8:31:33 AM (IST)

அஞ்சுகிராமம் அருகே கடலில் கால் நனைத்த போது ராட்சத அலை இழுத்துச்சென்றதில் நெல்லை மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தெலுங்கானா மாநிலம் பாட்ராட்ரி மாவட்டம் பாதா பலோன்ஜா தாலுகா ஜோதிநகரை சேர்ந்தவர் பதினேனி சுரேஷ். இவருடைய மகன் பதினேனி ஜெயந்த்சாய் (18). இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பி.டெக் முதலாமாண்டு படித்து வந்தார். இதற்காக அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார்.

இந்தநிலையில் பதினேனி ஜெயந்த்சாய் உள்பட விடுதியில் தங்கி படித்து வரும் 30 பேர் நேற்று முன்தினம் குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள ரஸ்தாகாடு கடற்கரைக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அங்குள்ள கடல் அழகை ரசித்த அவர்கள் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து ஆர்வமிகுதியில் கடலில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். 

அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக வந்த ராட்சத அலை ஒன்று பதினேனி ஜெயந்த்சாய் மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மற்றொரு மாணவரான மாடவா தருண் (18) ஆகிய 2 பேரையும் இழுத்துச் சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் கூச்சலிட்டதோடு 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். இதில் மாடவா தருண் மீட்கப்பட்டார். ஆனால் பதினேனி ஜெயந்த்சாய் கடலில் மூழ்கி விட்டார். 

இதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட மாடவா தருணை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையே, ரஸ்தாகாடு பொழிமுகம் கடற்கரையில் இருந்து சில மீட்டர் தூரத்தில் பதினேனி ஜெயந்த்சாய் பிணமாக மிதந்தார். அவரது உடலை போலீசார் மீட்டனர். சுற்றுலா வந்த இடத்தில் கடலில் மூழ்கி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory