» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் பரவலாக மழை: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!

திங்கள் 29, ஜூலை 2024 12:40:41 PM (IST)

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. திற்பரப்பு அருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே பகலில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. அதே சமயம் மலையோர பகுதிகளில் அவ்வப்போது சாரல் விழுந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை பரவலாக மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பொழிவு இருந்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைப்பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. 

மேலும் நாள் முழுவதும் வானம் கார் மேகம் சூழ்ந்தவாறே காணப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. விடுமுறை தினமான நேற்று திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் ஆனந்த குளியலிட்டனர். இதே போன்று சிறுவர் நீச்சல் குளத்திலும் நீச்சலடித்து குளித்து மகிழ்ந்தனர்.

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை தொடங்கிய மழையானது பகல் முழுவதும் விட்டு விட்டு பெய்தது. மழை காரணமாக அவ்வை சண்முகம் சாலை, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, செம்மாங்குடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 

நாகர்கோவிலில் கழிவுநீர் கால்வாய்களில் மணல் நிரப்பியுள்ளது. இதனால் மழைநீர் கால்வாயில் உடனடியாக வடிந்தோட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவ்வை சண்முகம் சாலை, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் பாய்ந்தது. மழை ஓய்ந்தபிறகும் சாலையில் கழிவுநீர் தேங்கி கிடந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory