» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் காமராஜர் பிறந்தநாள் விழா
திங்கள் 15, ஜூலை 2024 4:34:55 PM (IST)
நாகர்கோவிலில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்தனர்.
கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்தநாள் தினமான இன்று நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர் திருஉருவ சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட கழகம் சார்பாக மாவட்ட செயலாளர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி பேரூர் ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி பேரூர் ஊராட்சி கிளைக் கழக சார்புஅணி நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.