» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் ரயில் பெட்டி தடம் புரண்ட சம்பவம் ? விசாரணை தொடக்கம்

சனி 13, ஜூலை 2024 12:33:53 PM (IST)

நாகர்கோவிலில் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி தடம் புரண்ட சம்பவம் குறித்து ரயில்வே குழு விசாரணை நடத்தி வருகிறது. 

கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வழியாக அசாம் மாநிலம் திப்ரூகருக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வாராந்திர ரயிலாக இருந்த இந்த ரயில் நேற்று முன்தினம் முதல் தினசரி ரயிலாக மாற்றப்பட்டது. இந்த ரயில் தினமும் மாலை 5.25 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும். இதே போல திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரிக்கு இரவு 9.55 மணிக்கு வந்து சேரும்.

இந்த நிலையில் தினசரி ரயிலாக மாற்றப்பட்ட முதல் நாளிலேயே நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக கொண்டு வரப்பட்ட போது ஒரு பெட்டியில் உள்ள 2 சக்கரங்கள் தடம்புரண்டன. தண்டவாளத்தை விட்டு 2 சக்கரங்களும் வெளியே வந்துவிட்டது. இதுபற்றி தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் திருவனந்தபுரத்தில் இருந்து மீட்பு ரயில் வரவழைக்கப்பட்டு தடம்புரண்ட பெட்டி மீண்டும் தண்டவாளத்தில் இழுந்து நிறுத்தப்பட்டது. 

இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து குழு அமைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடச்சியாக நடந்துள்ளன. கடந்த 4-9-2023 அன்று நாகர்கோவில்- தாம்பரம் ரயிலும், 5-12-2021 அன்று சரக்கு ரயிலும் தடம்புரண்டது. 

மேலும் கடந்த 2018-ம் ஆண்டு நாகர்கோவில்- கோவை ரயிலும், கடந்த 2017-ம் ஆண்டு நாகர்கோவில்- சென்னை ரயிலும், அதற்கு முன்பு கன்னியாகுமரி- ஹவுரா ரயிலும் தடம்புரண்டது. திருவனந்தபுரம் கோட்டத்தில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தான் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், எனவே போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory