» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விவேக் எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக மாறியது : நெல்லை, மதுரை வழியாக இயக்க கோரிக்கை!

சனி 13, ஜூலை 2024 12:23:12 PM (IST)



குமரி- திப்ருகர் இடையே செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி ரயிலாக மாறிய நிலையில், இந்த திப்ருகர் ரயிலை நெல்லை, மதுரை வழியாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகர் என்ற இடத்துக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நாட்டிலேயே அதிக தூரம் அதாவது 4,273 கிலோ மீட்டர் தூரம் இயக்கப்படும் ரயில் ஆகும். முதலில் கொச்சுவேலியில் இருந்து எர்ணாகுளம் வழியாக திப்ருகருக்கு சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டது. பின்னர் கொச்சுவேலியில் இருந்தே நிரந்தர ரயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் கொச்சுவேலியில் இடநெருக்கடி ஏற்படும் என்ற காரணத்தால் இந்த ரயிலை கன்னியாகுமரியில் இருந்து இயக்கினர். இதைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு முதல் விவேக் ரயிலை தினசரி ரயிலாக மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 2023-ம் ஆண்டு முதல் விவேக் ரயில் சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தினசரி ரயிலாக இயக்கப்படும் என்று ரயில்வேத் துறை அறிவித்தது.

அதன்படி தினசரி ரயிலாக விவேக் எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் தனது முதல் சேவையை தொடங்குவதாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக நாகர்கோவில் யார்டில் பராமரிப்பு பணிக்காக வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி தடம்புரண்டது. பின்னர் தடம்புரண்ட பெட்டி மீட்கப்பட்டு கன்னியாகுமரியில் இருந்து நேற்று அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த ரயில் வழக்கமாக கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரயில் கேரளா வழியாக செல்வதால் குமரி மாவட்ட மக்களுக்கு இந்த ரயிலால் எந்த பயனும் இல்லை. இதனால் குமரி மாவட்ட ரயில் பயணிகள் திப்ருகர் ரயிலில் பயணம் செய்வதை தவிர்த்து வருகிறார்கள். எனவே தினசரி ரயிலாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் திப்ருகர் ரயிலை நெல்லை, மதுரை வழியாக இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவதற்கு முன்னதாக இந்த ரயில் புறப்படுகிறது. ஆனால் கேரளா வழியாக செல்வதால் வெறும் ரயில் தான் திருவனந்தபுரத்துக்கு செல்கிறது. அதுவே தமிழகம் வழியாக இயக்கும்போது நூற்றுக்கணக்கான பயணிகளுக்கு இந்த ரயில் பயனுள்ளதாக இருக்கும். எனவே திப்ருகர் ரயிலை மதுரை வழியாக இயக்க வேண்டும் என்பது பயணிகள் மற்றும் பயணிகள் சங்கத்தின் கோரிக்கையாக உள்ளது.


மக்கள் கருத்து

ChockalingamJul 17, 2024 - 12:07:08 PM | Posted IP 162.1*****

Passengers from kanyakumari to Chennai will be benefited ifs journey is routed through Nellai Madurai and Trichy

A.sekarJul 14, 2024 - 03:50:35 PM | Posted IP 172.7*****

c0tinue the work route change tamilnadu good opportunity

சத்தியராஜ் Sathyaraj.mJul 14, 2024 - 01:37:20 PM | Posted IP 162.1*****

தமிழக மக்களுக்கு வசதியாக அதிக அளவிலான பயணிகளுக்கான உதவியாக இருக்க வாய்ப்பாக அமையும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory