» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நெகிழி கழிவு கலந்த சிமெண்ட் காங்கீரீட் பேவர் பிளாக் யூனிட்: அமைச்சர் திறந்து வைத்தார்!

வியாழன் 28, செப்டம்பர் 2023 4:51:27 PM (IST)



சடையமங்கலம் ஊராட்சியில் நெகிழி கழிவு கலந்த சிமெண்ட் காங்கீரீட் பேவர் பிளாக் அலகினை  பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்  திறந்து வைத்தார்.
    
கன்னியாகுமரி மாவட்டம், சடையமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட, சரல்விளை பகுதியில் இன்று (28.09.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில்  பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்  நெகிழி கலந்த பேவர் பிளாக் அலகினை திறந்து வைத்து பேசுகையில் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வேலை இல்லாத பட்டதாரி மற்றும் பட்டதாரி அல்லாத இளைஞர்கள் அரசு பணிகளில் மட்டுமல்லாமல்  சுய தொழில் முனைவோர்களாக முன்னேற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி பயிற்சி, மாவட்ட தொழில் மையம், தாட்கோ உள்ளிட்ட துறைகள் வாயிலாக பல்வேறு தொழில் பயிற்சிகள் வழங்குவதோடு, புதிதாக தொழில் தொடங்க கடனுதவிகளும் வழங்கி இளைஞர்கள் வாழ்வில ஒளியேற்றி வருகிறார்கள். 

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இத்துறைகள் வாயிலாக இளைஞர்களுக்கு பல்வேறு விதமான கடனுதவிகள் வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தேசிய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களை ஊரக பகுதிகளில் செயல்படுத்தி கடைகோடி மக்களும் தொழில் முனைவோர்களாக முன்னேற வழிவகை செய்து வருகிறது. 

அதன் ஒருபகுதியாக சடையமங்கலம் ஊராட்சியில் பாரிஜாதம் ஆயத்த ஆடை அலகு, உயர்ரக தையல் கூடம், சென்டரிங்க தளவாடங்கள் வாடகை அலகு, ஜெராக்ஸ் யூனிட், பிரிண்டிங் பிரஸ் அலகு, சானிட்டரி நாப்கின் அலகு கட்டிடம், மசாலா பொருட்கள் தயாரிப்பு அலகு, எழுதுபொருட்கள் Klosk, துணி மற்றும் காதிதப்பை தயாரிப்பு அலகு, இ-சேவை மையம் என மொத்தம் ரூ.68.11 இலட்சம் மதிப்பில் சுய தொழில்கள் நடைபெற்று வருகிறது. 
மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்  திடக்கழிவு மேலாண்மை வாயிலாக தேசிய ரூர்பன் இயக்கம் நிதியின்கீழ் ரூ.16 இலட்சம் மதிப்பில் நெகிழி கழிவு கலந்த சிமெண்ட் காங்கீரீட் பேவர் பிளாக் தயாரிக்கும் நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டமானது மிகவும் பயனுள்ள திட்டம். நமது நாட்டில் சுற்றுசூழல் மாசினால் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே தேசிய மற்றும் மாநில அரசுகள் சுற்றுசூழலை பேணிக்காப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு விழிப்புணர்வினை தமிழ்நாடு அரசும், கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும் ஏற்படுத்தி வருகிறது.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் சுற்றுசூழலை பேணிக்காக்க பொதுமக்கள், தன்னார்வலர்கள், மாணவ மாணவியர்கள் அதிக அளவில் மரங்கள் நடவு செய்து சுத்தமான காற்றினை சுவாசிக்க முன்வர வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

நமது மாவட்டம் முன்னொரு காலத்தில் விவசாயம் நிறைந்த  மாவட்டமாக திகழ்ந்தது. தற்போது விவசாயம் குறைந்து காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது நமது மாவட்டத்தில் கல்வி மட்டுமே முலதனமாக உள்ளது. ஆனால் வேலைவாய்ப்பு மிகக்குறைவாக உள்ளது. எனவே இளைஞர்கள் பொதுமக்கள் அரசு பணிக்கு காத்திருக்காமல்  சூழ்நிலைக்கு ஏற்ற சுயதொழில்களை மேற்கொள்ள வேண்டும். சரல்விளை இளைஞர்கள் சுற்றுசூழலை பேணிக்காக்க நெகிழிகளை மறுசுழற்சி செய்து காங்கீரிட் பேவர் பிளாக் தொழிலினை  மேற்கொள்ள முயற்சி எடுத்து இன்று  அதனை செயல்படுத்தி உள்ளார்கள். இதோடு நின்றுவிடாமல் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து இளைஞர்களும் ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ள முன்வர வேண்டுமென தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சடைய மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அருள்ராஜ், உதவி திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பொன்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பு, திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் நசீர், ஊராட்சி தலைவர்கள் சிம்சன் (முத்தலகுறிச்சி), பால்ராஜ் (நுள்ளிவிளை) மற்றும்  அருளானந்த ஜார்ஜ், சுனில் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள்  பலர் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory